
posted 25th February 2022
கோவிட் தொற்று அப்டேற்
கொரோனா தொற்றால் நேற்று வியாழக்கிழமை மட்டும் நாட்டில் 30 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவரும், 30 - 59 வயது பிரிவில், 6 ஆண்களும், பெண் ஒருவருமாக 7 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 ஆண்களும், 8 பெண்களுமாக 22 பேரும் உயிரிழந்தனர்
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 116 ஆக உயர்வடைந்துள்ளது.
கைதான இந்திய மீனவர்கள்
காங்கேசன்துறை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 நாகை மாவட்ட மீனவர்களை இரு விசைப் படகுகளுடன் கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று விிவியாழக்கிழமை அதிகாலை மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து சம்பவம் நேற்று விியாழக்கிழமை முற்பகல் இடம் பெற்றது.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் எதிரே வந்த பட்டா வாகனத்துடன் மோதியுள்ளது. விபத்தில் தெய்வாதினமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House